Homeஉள்நாடுஉலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் சரிவு

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் சரிவு

உலகச் சந்தையில் WTI மற்றும் பிரண்ட் ரக கச்சா எண்ணெய்களின் விலைகள் கடந்த ஒகஸ்ட் மாதத்திற்குப் பின்னரான குறைந்த மட்டத்தைப் பதிவு செய்துள்ளன.

இன்று காலை 6.30 மணியளவில் வெளியான தரவுகளின்படி, WTI எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.45 அமெரிக்க டொலர்களாகவும், பிரண்ட் எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 89.63 அமெரிக்க டொலர்களாகவும் வீழ்ச்சியடைந்துள்ளன. இரு ரகங்களும் தலா 3.5 சதவீதம் சரிவடைந்துள்ளன.

அதேவேளை, மேர்பன் ரக எண்ணெயின் விலை சிறியளவில் அதிகரித்து 89.29 டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களுக்கு மத்தியிலும் எண்ணெய் விநியோகத்தில் பெரியளவிலான தடை ஏற்படாது என்ற எதிர்பார்ப்பே விலை வீழ்ச்சிக்குக் காரணம் எனப் பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular