இலங்கையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் உள்நாட்டு சின்ன வெங்காயம் மற்றும் முட்டையின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதன்படி, புறக்கோட்டை சந்தையில் ஒரு கிலோகிராம் சின்ன வெங்காயத்தின் விலை 527 ரூபாய் 60 சதத்திலிருந்து 675 ரூபாயாகவும், வெள்ளை முட்டை ஒன்றின் விலை 37 ரூபாய் 68 சதத்திலிருந்து 41 ரூபாய் 75 சதமாகவும் உயர்ந்துள்ளது.
நாரஹேன்பிட்ட பொருளாதார மத்திய நிலையத்திலும் சின்ன வெங்காயத்தின் விலை 700 ரூபாயிலிருந்து 820 ரூபாயாகவும், முட்டையின் விலை 39 ரூபாய் 60 சதத்திலிருந்து 42 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
இதேவேளை, புறக்கோட்டை சந்தையில் போஞ்சி மற்றும் கோவா ஆகிய மரக்கறி வகைகளின் விலைகள் கிலோகிராமுக்கு தலா 20 ரூபாயால் குறைந்துள்ளதாக மத்திய வங்கியின் வாராந்த பொருளாதார அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
