HomeTop newsசாமர சம்பத் தஸநாயக்கவின் விளக்கமறியல் டிசம்பர் 27 வரை நீடிப்பு

சாமர சம்பத் தஸநாயக்கவின் விளக்கமறியல் டிசம்பர் 27 வரை நீடிப்பு

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் சுமதிபால லியனாராச்சி ஆகியோரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரத்தியேக செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான உத்தரவு எதிர்வரும் 27ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

மேலும், இவ்வழக்கின் நான்காவது சந்தேகநபரான தினேஷ் பெரேராவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திறந்த பிடியாணை பிறப்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular