HomeTop newsதொழிற்சங்க செயற்பாட்டாளர் ஆனந்த பாலித்த கைது

தொழிற்சங்க செயற்பாட்டாளர் ஆனந்த பாலித்த கைது

தொழிற்சங்க செயற்பாட்டாளரான ஆனந்த பாலித்த மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மேலதிக நேரக் கொடுப்பனவுகள் தொடர்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த காலப்பகுதியில் மேலதிக நேரக் கொடுப்பனவுகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் முன்னெடுத்து வருகின்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular