Homeவிளையாட்டுமுதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகள் - மோசமான சாதனை படைத்த இந்திய அணி

முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகள் – மோசமான சாதனை படைத்த இந்திய அணி

நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதல் ஓவரிலேயே ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் 3 விக்கெட்டுகளை இழந்து மோசமான சாதனை படைத்துள்ளது.

நேற்று (13) நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 333 ஓட்டங்களைக் குவித்தது. பதிலளித்த இந்திய அணி 89 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 244 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

நியூசிலாந்து வீரர் மேட் ஹென்ரி முதல் ஓவரிலேயே ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மொத்தமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் ஓவரிலேயே ஓட்டங்கள் எதுவுமின்றி 3 விக்கெட்டுகளை இழந்த இரண்டாவது அணியாக இந்தியா பதிவாகியுள்ளது.

இதற்கு முன்னர் 1997ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தென்னாபிரிக்க அணி இத்தகைய நிலையைச் சந்தித்திருந்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular