HomeTop newsPSTA சட்டமூலத்திற்கு எதிராக 26 மனுக்கள்

PSTA சட்டமூலத்திற்கு எதிராக 26 மனுக்கள்

‘பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாத்தல்’ (PSTA) சட்டமூலத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கிடைத்துள்ளதாகச் சபாநாயகர் அலுவலகம் இன்று (10) உறுதிப்படுத்தியுள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள குறித்த சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை, கடந்த நவம்பர் 4ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் ஆரம்பமானது.

பிரதம நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன மற்றும் நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி, சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய மூவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த விசாரணைகள் இடம்பெற்றன.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் குறித்த சட்டமூலத்துக்கு எதிராக மொத்தம் 26 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்தச் சட்டமூலத்தின் சில ஏற்பாடுகள் அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாக மனுதாரர்கள் தமது மனுக்களில் சுட்டிக்காட்டியிருந்தனர்.

மனுக்கள் மீதான விசாரணைகளை நிறைவு செய்த உயர் நீதிமன்றம், சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை தொடர்பான தனது வியாக்கியானத்தை ஜனாதிபதி மற்றும் சபாநாயகர் ஆகியோருக்கு முறைப்படி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் குறித்த வியாக்கியானம் தற்போது சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கிடைத்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular