HomeTop newsஅனுராதபுரத்தின் பல பகுதிகளுக்கு நாளை நீர் விநியோக தடை

அனுராதபுரத்தின் பல பகுதிகளுக்கு நாளை நீர் விநியோக தடை

அனுராதபுரத்தின் பல பகுதிகளுக்கு நாளை (22) 8 மணி நேர நீர் விநியோக தடை ஏற்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அதன்படி, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நீர் விநியோக தடை ஏற்படும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேலும் அறிவித்துள்ளது.

நுகர்வோருக்கு சிறந்த தரமான நீர் சேவையை வழங்கும் நோக்கில், அனுராதபுரம் துருவில நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

நீர் விநியோகத் தடையால் நுகர்வோருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை வருத்தம் தெரிவிப்பதோடு, பொதுமக்கள் தமக்கு தேவையான நீரை சேமித்து, முடிந்தவரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular