Homeவிளையாட்டுஇலங்கை தொடரில் இருந்து விலகிய ஆதில் ரஷீத் - இங்கிலாந்துக்கு பின்னடைவு

இலங்கை தொடரில் இருந்து விலகிய ஆதில் ரஷீத் – இங்கிலாந்துக்கு பின்னடைவு

இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்கியுள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஆதில் ரஷீத் காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரின் எந்தப் போட்டியிலும் அவர் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வரும் நிலையில், 2-வது போட்டி ஹெட்டிங்லீயிலும், 3-வது மற்றும் கடைசி போட்டி ஓவலிலும் நடைபெறவுள்ளது.

இங்கிலாந்து அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக ஆதில் ரஷீத் இருந்து வரும் நிலையில், அவரது காயம் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி உலகக் கோப்பையை வென்றபோது, அந்த அணியில் ஆதில் ரஷீத் இடம்பெற்றிருந்தார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அவரது அனுபவம் இங்கிலாந்து அணிக்கு முக்கியமானதாக இருந்து வருகிறது.

இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 39 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 211 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதற்கு முன்னதாக இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular