HomeTop newsசுரேஷ் சலே மனு மீதான விசாரணை 25ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

சுரேஷ் சலே மனு மீதான விசாரணை 25ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளுடன் தொடர்புடைய வகையில் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட நடவடிக்கையை சவாலுக்கு உட்படுத்தி அரச புலனாய்வுப் பிரிவு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே யினால் முன்வைக்கப்பட்ட மனுவுடன் தொடர்புடைய இடையீட்டு மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (10) மீண்டும் ஆராயப்பட்டது.

இதன்போது இடையீட்டு மனுதாரர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகிய சட்டத்தரணிகள் விடயங்களை முன்வைத்தனர்.

இதனை அடுத்து மேலதிக விடயங்களை ஆராய்வதற்காக இம்மாதம் 25 ஆம் திகதி வரை மனு மீதான விசாரணையை ஒத்தி வைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular