HomeTop newsபுலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் ஒரு மாத காலத்திற்குள்

புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் ஒரு மாத காலத்திற்குள்

2026 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகளை ஒரு மாத காலத்திற்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.

விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இம்முறை ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,723 பரீட்சை நிலையங்களில் நேற்று (09) நடைபெற்றது.

இதில் மொத்தம் 294,089 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.

சிங்கள மொழிமூலப் பரீட்சைக்கு 220,366 மாணவர்களும், தமிழ் மொழிமூலப் பரீட்சைக்கு 73,723 மாணவர்களும் தோற்றியுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular