அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக (CEO) நியமிக்கப்பட்டுள்ள அஷ்-ஷைக் வை. எல். எம். நவவீ, இன்று (10) உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஜம்இய்யாவின் தலைவர் மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் முன்னிலையில் இந்த கடமையேற்பு நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது, ஜம்இய்யாவின் தலைவர், உப தலைவர்கள், பொருளாளர், உதவிப் பொதுச் செயலாளர் மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியை வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கட்டமைப்பு, செயற்பாடுகள் மற்றும் அதன் பணிகள் தொடர்பான விரிவான அறிமுகத்தை வழங்கினார்.
அத்துடன், ஜம்இய்யாவின் உப தலைவர் எம். எச். எம். புர்ஹான், அமைப்பின் பல்வேறு உப பிரிவுகள் மற்றும் அவற்றில் பணியாற்றும் ஆளணியினர் தொடர்பான அறிமுகத்தை வழங்கினார்.
இதன்போது, புதிய பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்-ஷைக் வை. எல். எம். நவவீ அவர்களுக்கு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கடந்த 10 வருடகால செயற்பாடுகளை உள்ளடக்கிய செயற்பாட்டறிக்கையின் பிரதியொன்றும் கையளிக்கப்பட்டது.
