நேற்று முன்தினம் (01) பதிவான விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (03) தங்க விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 374,000 ரூபாய்க்கும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 344,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,000 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தை நிலவரம் மற்றும் நாணய மாற்று விகிதம் உள்ளிட்ட காரணிகளைப் பொறுத்து தங்கத்தின் விலையில் அடுத்த நாட்களில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என நகையக வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
