ஈரான் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, குவைத் சர்வதேச விமான நிலையத்தின் விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
விமான நிலையத்தின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதால், குவைத்தின் தேசிய விமான சேவையான ‘குவைத் எயார்வேஸ்’ தனது பெரும்பாலான விமானப் பயணங்களின் நேர அட்டவணையை மாற்றியமைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
இதனால், பயணிகள் தங்களது விமானப் பயணங்களின் புதிய நேரங்கள் மற்றும் தற்போதைய நிலை தொடர்பான தகவல்களை தொடர்ந்து சரிபார்த்து, விமான நிறுவனத்தின் அறிவிப்புகளை அவதானத்துடன் பின்பற்றுமாறு குவைத் எயார்வேஸ் கேட்டுக்கொண்டுள்ளது.
பாதுகாப்பு நிலைமையை தொடர்ந்து மதிப்பீடு செய்து வருவதாகவும், சூழ்நிலைக்கு ஏற்ப விமானச் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
