Homeவிளையாட்டுஹைட்டியை வீழ்த்தி ஸ்கொட்லாந்து அபார வெற்றி

ஹைட்டியை வீழ்த்தி ஸ்கொட்லாந்து அபார வெற்றி

2026 ஃபிஃபா உலகக் கிண்ண கால்பந்து தொடரின் குரூப் ‘சி’ பிரிவில் நடைபெற்ற விறுவிறுப்பான லீக் ஆட்டத்தில், ஹைட்டி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்கொட்லாந்து அணி வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

போட்டியின் தொடக்கம் முதலே இரு அணிகளும் சமநிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தின. எனினும், 28ஆவது நிமிடத்தில் ஸ்கொட்லாந்தின் நட்சத்திர வீரர் ஜான் மெக்கின் அடித்த அற்புதமான கோல் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அந்த கோலின் மூலம் முன்னிலை பெற்ற ஸ்கொட்லாந்து, இறுதிவரை தனது ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொண்டது.

பின்னடைவைச் சந்தித்த ஹைட்டி அணி பலமுறை தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், பதில் கோல் அடிக்க முடியாமல் போனது. இதனால், ஸ்கொட்லாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை உறுதி செய்தது.

இந்த வெற்றியின் மூலம் ஸ்கொட்லாந்து அணி 3 புள்ளிகளுடன் குரூப் ‘சி’ பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதேவேளை, இதே பிரிவில் நடைபெற்ற பிரேசில் – மொராக்கோ அணிகளுக்கிடையிலான போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் நிறைவடைந்ததால், இரு அணிகளும் தலா ஒரு புள்ளியுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

முதல் போட்டியிலேயே தோல்வியை சந்தித்த ஹைட்டி அணி, புள்ளிகள் ஏதுமின்றி குழுவின் கடைசி இடத்தில் உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular