HomeTop newsமே 28 இல் ஹஜ் பெருநாள் - கொழும்பு பெரிய பள்ளிவாசல் உத்தியோகபூர்வ அறிவிப்பு

மே 28 இல் ஹஜ் பெருநாள் – கொழும்பு பெரிய பள்ளிவாசல் உத்தியோகபூர்வ அறிவிப்பு

இம்முறை ஹஜ் பெருநாள் எதிர்வரும் 28ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இஸ்லாமிய நாட்காட்டியின் 12ஆவதும் இறுதியுமான மாதமான ‘துல் ஹஜ்’ மாதத்திற்கான புதிய தலைபிறை, இன்றைய தினம் இலங்கையின் எந்தவொரு பகுதியிலும் தென்படவில்லை என்பதை கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கமைய, புதிய மாதத்தின் ஆரம்பம் அல்லது துல் ஹஜ் மாதத்தின் முதல் நாள் மே மாதம் 19ஆம் திகதியாகக் கருதப்படுவதுடன், அதனடிப்படையில் மே மாதம் 28ஆம் திகதி ஹஜ் பெருநாளைக் கொண்டாடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular