Homeஉள்நாடுகடும் மழை காரணமாக ஹட்டன் வலயப் பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை

கடும் மழை காரணமாக ஹட்டன் வலயப் பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை

நாட்டில் நிலவி வரும் கடும் மழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக, ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (15) விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண கல்விப் பணிப்பாளரின் ஆலோசனையின் பேரில், ஹட்டன் வலயக் கல்வி அலுவலகம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

அதன்படி, ஹட்டன் கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் இன்று விடுமுறை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கற்பித்தல் நடவடிக்கைகள் அல்லாத வேறு எந்த தேவைகளுக்காகவும் ஆசிரியர்கள் அல்லது மாணவர்களை பாடசாலைக்கு அழைக்க வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகள் தொடர்பில், நிலவும் வானிலை மற்றும் தேவைகளை கருத்தில் கொண்டு, வலயக் கல்விப் பணிப்பாளர்களின் ஆலோசனையின் கீழ் உரிய தீர்மானங்களை எடுக்க அதிபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular