அரச ஊழியர்களின் வேதன உயர்வு மற்றும் அவர்களின் தொழில்சார் நிபுணத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் விசேட ஆணைக்குழுவை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
அரச துறையில் பல தசாப்தங்களாக நிலவி வரும் வேதன முரண்பாடுகள் மற்றும் தொழில்முறை தொடர்பான பிரச்சினைகளுக்கு இந்த ஆணைக்குழு மூலம் தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்கி, அவர்களின் தொழில்திறன் மற்றும் நிபுணத்துவத்தை உயர்த்தும் வகையில் விசேட ஆணைக்குழு அமைக்கப்படும் எனும் அறிவிப்பு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் 2026ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் முன்வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய, அரச ஊழியர்களின் நீண்டகாலக் கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த செயல்முறை தற்போது உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
