Homeஉலகம்தமிழக மீனவர்களை விடுவிக்க ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்

தமிழக மீனவர்களை விடுவிக்க ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டத்தின் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 6 மீனவர்கள் அண்மையில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவம் மீனவர் குடும்பங்களிடையே அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதாக முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட 6 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் பாதுகாப்பாக தாயகம் திரும்பச் செய்வதற்காக, இலங்கை அரசின் மீது தேவையான தூதரக அழுத்தங்களை இந்திய அரசு செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தமிழக மீனவர்களின் பாதுகாப்பும் வாழ்வாதாரமும் உறுதிப்படுத்தப்பட வேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் விஜய், இந்த விவகாரத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உடனடியாக தலையிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular