Homeஉலகம்ட்ரம்பின் பிடிவாதத்தால் எகிறும் கச்சா எண்ணெய் விலை

ட்ரம்பின் பிடிவாதத்தால் எகிறும் கச்சா எண்ணெய் விலை

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் ஒருமுறை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவுக்கு ஈரான் வழங்கிய பதிலை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஏற்காததே இந்த விலை உயர்வுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படுவதாகவும் அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.

அதன்படி, பிரெண்ட் வகை கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை 104.1 அமெரிக்க டொலராகவும், டபிள்யூ.டி.ஐ வகை கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை 98.51 அமெரிக்க டொலராகவும் பதிவாகியுள்ளது.

சர்வதேச அரசியல் பதற்றங்கள் மற்றும் விநியோக நிலைமைகள் காரணமாக எண்ணெய் சந்தையில் அலைச்சல் தொடரக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular