Homeசெய்திமும்பை, பஞ்சாப் அணிகள் இன்று பலப்பரீட்சை!

மும்பை, பஞ்சாப் அணிகள் இன்று பலப்பரீட்சை!

ஐ.பி.எல். 2026 தொடரில் இன்று (16) நடைபெறும் 24 ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

மும்பை நகரில் உள்ள வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.

தொடர் ஆரம்பத்தில் சில தடுமாற்றங்களை சந்தித்த மும்பை அணி, தற்போது மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப உற்சாகத்துடன் களமிறங்குகிறது.

ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை எந்த தோல்வியும் சந்திக்காமல் தொடரில் ஒரே அணியாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இரு அணிகளும் இதுவரை 34 முறை நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், தலா 17 வெற்றிகளை பதிவு செய்துள்ளன.

இதனால், இன்றைய ஆட்டம் யாருக்கு மேலாதிக்கம் கிடைக்கும் என்ற ஆவலை ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்த மோதலில் பரபரப்புக்கு எந்த குறையும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular