Homeஉலகம்அமெரிக்காவின் தடையை மீறி ஹார்முஸ் நீரிணையை கடந்த சீன கப்பல்!

அமெரிக்காவின் தடையை மீறி ஹார்முஸ் நீரிணையை கடந்த சீன கப்பல்!

அமெரிக்கா​வின் தடையை மீறி சீன எரி​வாயு கப்​பல் நேற்று ஹார்முஸ் நீரிணையை கடந்து சென்​றது. இது அமெரிக்கா​வுக்கு விடுக்​கப்​பட்ட சவாலாக கருதப்படுகிறது.

ஈரானை ஒட்டி அமைந்​துள்ள ஹார்​முஸ் நீரிணையின் இரு முனை​களி​லும் சரக்​கு, எண்​ணெய் கப்​பல் போக்​குவரத்தை அமெரிக்க கடற்​படை முடக்கி உள்​ளது.

இந்த சூழலில் அமெரிக்​கா​வின் தடையை மீறி சீனா​வின் ரிச்ஸ்டாரி என்ற எரி​வாயு கப்​பல் நேற்று ஹார்​முஸ் நீரிணையை கடந்​தது.

இதில் 2.5 லட்​சம் பேரல் மெத்​த​னால் நிரப்​பப்​பட்டு இருந்​தது. ஐக்​கிய அரபு அமீரகத்​தின் துறைமுகத்​தில் இருந்து சீன கப்​பல் புறப்​பட்​ட​தாகக் கூறப்படு​கிறது.

இந்த சீன கப்​பல் ஈரானில் இருந்து தொடர்ச்​சி​யாக எரிவாயுவை நிரப்​பிச் சென்​றது. இதன்​காரண​மாக அண்​மை​யில் ரிச் ஸ்டாரி கப்​பலுக்கு அமெரிக்க அரசு தடை விதித்​தது.

ஆனால் அமெரிக்​கா​வின் தடையை மீறி அந்த கப்​பல் மேற்கு ஆசி​யா​வில் தொடர்ந்து இயக்​கப்​பட்டு வருகிறது.

ரிச் ஸ்டாரி நேற்று ஹார்​முஸ் நீரிணையை கடந்​த​போது, கப்​பலின் கேப்​டன் அமெரிக்க கடற்​படைக்கு முறைப்​படி தகவல் தெரி​வித்​துள்​ளார்.

அமெரிக்க அரசால் தடை விதிக்கப்​பட்ட கப்​பல் என்​ற​போ​தி​லும் அந்த கப்​பல் தடுத்து நிறுத்​தப்​பட​வில்​லை. அமெரிக்கா​வுக்கு சவால் விடுக்​கும் வகை​யில் ஹார்​முஸ் நீரிணையை  சீன கப்​பல் கடந்து சென்​றிருப்​ப​தாக சர்​வ​தேச பாது​காப்பு நிபுணர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular