Homeஉலகம்ஈரான்மீதான துறைமுக முற்றுகை ஆபத்தானது: சீனா எச்சரிக்கை!

ஈரான்மீதான துறைமுக முற்றுகை ஆபத்தானது: சீனா எச்சரிக்கை!

ஈரான்மீதான அமெரிக்காவின் துறைமுக முற்றுகையை சீனா வன்மையாகக் கண்டித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ஆபத்தானது மற்றும் பொறுப்பற்றது என சீன வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட இந்த முற்றுகை, தற்போதைய தற்காலிக போர்நிறுத்தத்தை சீர்குலைக்கும் என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானிடமிருந்து அதிகப்படியான கச்சா எண்ணெயைப் பெறும் சீனா, சர்வதேச சந்தை மற்றும் பொருளாதார நிலைத்தன்மை கருதி இந்த மோதல் முடிவுக்கு வர வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular