Homeஉள்நாடுஅஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு!

அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு!

“அஸ்வெசும” கொடுப்பனவு பெறுபவர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று (07) உரையாற்றினார். இதன்போதே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.

இதற்கமைய மாதாந்தம் 17,500 ரூபாவை பெறும் அஸ்வெசும பயனாளிகளுக்கு இம்மாதம் 25,000 ரூபா கிடைக்கப்பெறும்.

மாதாந்தம் 10,000 ரூபா பெறும் பயனானிகளுக்கு 15,000 ரூபா வழங்கப்படும்.

மாதாந்தம் 5,000 ரூபாவை அஸ்வெசும கொடுப்பனவாக பெறுபவர்களுக்கு 7,500 ரூபா வழங்கப்படும்.

இம்மாதம் மாத்திரமே இந்த கொடுப்பனவு அதிகரிப்பு வழங்கப்படும்.

இதற்காக இம்மாதத்தல் மாத்திரம் 8,500 மில்லியன் ரூபா மேலதிக செலவு அரசாங்கத்துக்கு ஏற்படும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular