Homeஉள்நாடுதொடரும் சோகம்!

தொடரும் சோகம்!

இந்திய அணி நேற்று பெற்ற வெற்றிமூலம் நியூசிலாந்தின் உலகக்கோப்பை கனவு மீண்டும் ஒருமுறை தகர்ந்துள்ளது.

அதன்படி கடந்த 11 ஆண்டுகளில் ஐசிசி நடத்தும் முக்கிய கிரிக்கெட் தொடர்களின் இறுதிப் போட்டிகளில் நியூசிலாந்து அணி தோல்வியைத் தழுவுவது இது 6-வது முறையாகும்.

இதுவரை 8 முறை ஐசிசி தொடர்களின் இறுதிப் போட்டிகளுக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது. அதில் 2 முறை மட்டுமே (2000 சாம்பியன்ஸ் ட்ராபி, 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்) வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 6 முறை தோல்வியைச் சந்தித்துள்ளது.

2009 சாம்பியன்ஸ் ட்ராபி: ஆஸ்திரேலியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.

2015 ஒருநாள் உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.

2019 ஒருநாள் உலகக்கோப்பை: இங்கிலாந்துடன் நடைபெற்ற போட்டியில் பவுண்டரி கணக்கு அடிப்படையில் தோல்வி.

2021 டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.

2025 சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.

2026 டி20 உலகக்கோப்பை: நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவிடம் 96 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.

இருப்பினும், ஐசிசி தொடர்களில் அதிகமுறை (14 முறை) அரையிறுதிக்கு முன்னேறிய அணி என்ற பெருமையை நியூசிலாந்து இப்போதும் தக்கவைத்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular