கொழும்பு கொள்ளுபிட்டிய பகுதியில் உள்ள ஆர்.ஏ. டி மெல் மாவத்தையில் வீதியின் ஒரு பகுதி தாழிறங்கியதால் பள்ளமொன்று ஏற்பட்டுள்ளது.
கொள்ளுபிட்டியவிலிருந்து பம்பலப்பிட்டி நோக்கிச் செல்லும் வீதியில் அமைந்துள்ள முதலாவது பேருந்து நிறுத்தத்திற்கு எதிரே இந்தப் பள்ளம் உருவாகியுள்ளது.
குறித்த பகுதியில் முன்னதாகக் குழாய்களைப் பதிப்பதற்காகத் தோண்டப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது அந்த இடத்தில் சுமார் நான்கு அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் குறித்த வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மற்றும் பாதசாரிகள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
