HomeTop news81ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் மஹிந்த ராஜபக்ஷ - உணர்வுபூர்வ வாழ்த்து தெரிவித்த நாமல்

81ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் மஹிந்த ராஜபக்ஷ – உணர்வுபூர்வ வாழ்த்து தெரிவித்த நாமல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (18) தனது 81ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

1945ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் திகதி ஹம்பாந்தோட்டை, வீரகெட்டியவில் பிறந்த அவர், 2005 முதல் 2015ஆம் ஆண்டு வரை இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாகப் பதவி வகித்தார். மேலும், 2020 முதல் 2022ஆம் ஆண்டு வரை பிரதமராகவும் செயற்பட்டார்.

இந்நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவரது மூத்த மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, தனது தந்தைக்கு சமூக வலைத்தளத்தில் உணர்வுபூர்வமான பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியொன்றைப் பதிவிட்டுள்ளார்.

தந்தையின் பிறந்தநாளில் அவருக்கு அருகில் இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள நாமல், சிறைச்சாலையின் சுவர்களுக்கு அப்பாலும் தனது அன்பும் மரியாதையும் குறையாது என தெரிவித்துள்ளார்.

மேலும், தலைமைத்துவம், பொறுமை, தைரியம் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் மனவலிமை ஆகியவற்றைத் தனது தந்தையிடமிருந்தே கற்றுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன்னால் நேரில் இருக்க முடியாவிட்டாலும், தனது பிள்ளைகள் தாத்தாவுடன் இருந்து பிறந்தநாளைக் கொண்டாடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இறுதியாக, தனது தந்தைக்கு நீண்ட ஆயுள், ஆரோக்கியம் மற்றும் மனவலிமை கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்தித்து நாமல் ராஜபக்ஷ பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular