HomeTop newsஞானசார தேரரின் 4 வருட சிறைத்தண்டனை உறுதி

ஞானசார தேரரின் 4 வருட சிறைத்தண்டனை உறுதி

இஸ்லாம் மதத்திற்கு அவதூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல்நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

குறித்த தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் திகதி கொழும்பு கிருலப்பனை பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஞானசார தேரர் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அவர் வெளியிட்ட கருத்துக்கள் இஸ்லாம் மதத்திற்கு அவதூறு ஏற்படுத்தியதுடன், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

இதனடிப்படையில், இலங்கைத் தண்டனைச் சட்டக்கோவையின் 291ஆவது பிரிவின் கீழ் சட்டமா அதிபரால் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு விசாரணைகளின் முடிவில், ஞானசார தேரர் குற்றவாளியாகக் காணப்பட்டு, 2024ஆம் ஆண்டு கொழும்பு மேல்நீதிமன்றத்தினால் நான்கு வருட பாரிய கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து அவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், குறித்த மேன்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்துள்ள நீதிமன்றம், கொழும்பு மேல்நீதிமன்றம் விதித்த நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனையை உறுதிப்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular