HomeTop newsசஷி வீரவங்சவின் இரண்டு வருட சிறைத்தண்டனை உறுதி

சஷி வீரவங்சவின் இரண்டு வருட சிறைத்தண்டனை உறுதி

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி சஷி வீரவங்சவுக்கு விதிக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று (18) உறுதிப்படுத்தியுள்ளது.

முறையற்ற வெளிநாட்டுக் கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக அவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இதன்படி, திறந்த நீதிமன்றத்தில் ஆஜரான சஷி வீரவங்சவை உடனடியாக விளக்கமறியலில் வைக்குமாறும், சிறைத்தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்காக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular