Homeஉலகம்நேபாளத்தில் நிலச்சரிவால் மீண்டும் வெள்ளப்பெருக்கு

நேபாளத்தில் நிலச்சரிவால் மீண்டும் வெள்ளப்பெருக்கு

நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் உள்ள புத்தி கண்டகி ஆற்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் குடியிருப்புகள், பாலங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சும்னுபிரி மற்றும் தார்சே ஆகிய கிராமப்புற நகராட்சிப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கின் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காத்மாண்டுவிலிருந்து சுமார் 100 கிலோமீற்றர் மேற்கே அமைந்துள்ள கோர்கா மாவட்டத்தின் சும்னுபிரி பகுதியில் ஏற்பட்ட வறண்ட நிலச்சரிவு காரணமாக, புத்தி கண்டகி ஆற்றின் நீரோட்டம் தடைப்பட்டு, கீழ்நிலைப் பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

எனினும், இந்தச் சம்பவத்திற்கான துல்லியமான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பாதிப்புகள் தொடர்பான மேலதிக தகவல்களை அதிகாரிகள் தொடர்ந்து சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் இதுவரை எந்தவொரு இலங்கையரும் பாதிக்கப்படவில்லை என இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

நேபாளத்தின் மத்தியப் பகுதியில் நிலவும் நிலைமைகள் குறித்து, காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம் அந்நாட்டில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகளுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வருவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலவும் சூழ்நிலை தொடர்பான அண்மைய தகவல்களை இலங்கைப் பிரஜைகளுக்கு தூதரகம் தொடர்ச்சியாக வழங்கி வருவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular