HomeTop newsஎட்டு மாகாணங்களுக்கு மிக பலத்த மின்னல் எச்சரிக்கை

எட்டு மாகாணங்களுக்கு மிக பலத்த மின்னல் எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல், வடக்கு, வடமத்திய மற்றும் தென் மாகாணங்களுக்கு பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (08) முற்பகல் 11.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல், நாளை (09) அதிகாலை 1.00 மணி வரை அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, குறித்த மாகாணங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இதன்போது பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் காணப்படுவதாகவும் திணைக்களம் எச்சரித்துள்ளது.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்காக பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular