HomeTop newsஅமெரிக்க எச்சரிக்கைக்கு மத்தியில் இலங்கை எடுத்த நிதானமான நிலைப்பாடு

அமெரிக்க எச்சரிக்கைக்கு மத்தியில் இலங்கை எடுத்த நிதானமான நிலைப்பாடு

வித்த அவர், இந்தக் கப்பல்கள் தொடர்பில் ஏதேனும் முடிவெடுப்பதற்கு முன்னர் இலங்கைக்கு ஏற்படக்கூடிய சாத்தியமான விளைவுகள் குறித்து அரசாங்கம் கவனமாகப் பரிசீலிக்கும் என்றார்.

இலங்கை கடற்பரப்புக்கு அருகிலுள்ள ஈரானியக் கப்பல்களுக்கு உதவியோ வசதிகளோ அளித்தால் இலங்கை இரண்டாம் நிலைத் தடைகளை (Secondary Sanctions) எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அமெரிக்கா எச்சரித்துள்ளதாக ‘வோல் ஸ்ட்ரீட் ஜர்னல்’ (Wall Street Journal) செய்தி வெளியிட்டிருந்த நிலையிலேயே அமைச்சர் இந்தக் கருத்தை வௌியிட்டார்.

அமெரிக்கத் தடைகளுக்கு மத்தியில் பல நாட்களாகச் சிக்கியுள்ள இந்தக் கப்பல்கள், உணவு உள்ளிட்ட அவசர உதவிகளைக் கோரியுள்ள போதிலும், அரசாங்கத்தின் அனுமதியின்றி சேவைகளை வழங்க முடியாது என உள்ளூர் கப்பல் முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர், எந்தவொரு தரப்பின் அழுத்தங்களுக்கும் கட்டுப்படாமல் இலங்கை தனது தேசிய நலன்களை முன்னிறுத்தியே செயற்படும் என்றார்.

மேலும், இந்தக் கப்பல்கள் இலங்கையின் 12 கடல் மைல் எல்லைக்குட்பட்ட கடற்பரப்பில் இல்லாமல், இந்து சமுத்திரத்தின் சர்வதேசக் கடற்பரப்பிலேயே உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த காலத்தில், மத்திய கிழக்கில் நிலவிய போர்க்கால சூழலின் போதும் இலங்கை எந்தவொரு பக்கமும் சாராமல் மனிதநேய அடிப்படையில் மட்டுமே செயற்பட்டதை நினைவுகூர்ந்த அமைச்சர், தற்போதைய சூழலிலும் இலங்கை நாட்டின் பாதுகாப்பையும் மக்களின் நலனையும் முதன்மையாகக் கொண்டு நிதானமான மற்றும் சமநிலையான அணுகுமுறையைப் பின்பற்றும் எனத் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular