HomeTop newsநாடு முழுவதும் இன்று மதுபானசாலைகள் மூடல்

நாடு முழுவதும் இன்று மதுபானசாலைகள் மூடல்

உலக மதுவிலக்கு தினத்தை முன்னிட்டு இன்று (3) நாடு தழுவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகள் மற்றும் மதுவிற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என இலங்கை மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

ஆண்டுதோறும் ஒக்டோபர் 3 ஆம் திகதி சர்வதேசமதுவிலக்கு தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

மதுபானப் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், மதுப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது அல்லது முழுமையாகத் தவிர்ப்பதை ஊக்குவிப்பதுமே இந்த நாளின் முதன்மை நோக்கமாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular