வடமேற்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல் மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும், காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கும் கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளதுடன், இன்று (02) இரவு 11.30 மணி வரை எச்சரிக்கை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இதன்போது சில பகுதிகளில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களைத் தவிர்த்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
