HomeTop news22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மீது நாடாளுமன்ற விவாதம் தொடக்கம்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மீது நாடாளுமன்ற விவாதம் தொடக்கம்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் இன்று ஆரம்பமாகியுள்ளது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார, குறித்த சட்டமூலங்களை இரண்டாம் வாசிப்புக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து விவாதம் ஆரம்பமானது.

விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அமைச்சர், தற்போதைய அரசாங்கம் மக்களால் வழங்கப்பட்ட ஆணைக்கு அமைவாக செயற்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனமான “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்பதில் நீதித்துறை மற்றும் சட்டக் கட்டமைப்பு தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள அடிப்படைக் கொள்கைகளை அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அதன்படி, சட்டத்தின் முன் அனைவருக்கும் சமமான மற்றும் நியாயமான பாதுகாப்பு, அத்துடன் வெளிப்படைத்தன்மை, செயல்திறன், சுயாதீனம் மற்றும் மக்கள் நம்பிக்கை ஆகியவை முக்கியக் கொள்கைகளாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த அடிப்படைக் கொள்கைகளின் அடிப்படையிலேயே நாட்டின் நீதித்துறை கட்டமைப்பை முன்னெடுப்பதாக மக்களுக்கு உறுதியளிக்கப்பட்டிருந்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

“அந்த வாக்குறுதியின் ஒரு பகுதியை நிறைவேற்றும் நாளே இன்றைய நாள். அதுவே இந்த இரு சட்டமூலங்களுமாகும்” என அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular