HomeTop newsதேநீர், பால் தேநீர் விலை 5 ரூபாவால் குறைப்பு

தேநீர், பால் தேநீர் விலை 5 ரூபாவால் குறைப்பு

லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதைக் கருத்திற்கொண்டு, தேநீர் மற்றும் பால் தேநீரின் விலைகளை 5 ரூபாவால் குறைக்க அகில இலங்கை உணவகங்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதால் உணவகங்களின் செயற்பாட்டு செலவுகளில் ஏற்படும் குறைப்பின் பயனை நுகர்வோருக்கும் வழங்கும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மூலப்பொருட்களின் விலைகள் குறையும் பட்சத்தில், எதிர்காலத்தில் ஏனைய உணவுப் பொருட்களின் விலைகளையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இலங்கை உணவகங்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular