Homeஉள்நாடுநெல் சந்தைப்படுத்தல் சபையினால் இதுவரை 33,666 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு

நெல் சந்தைப்படுத்தல் சபையினால் இதுவரை 33,666 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு

நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல் கொள்வனவுச் செயற்றிட்டத்தின் கீழ் இதுவரை 33,666 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அச்சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார்.

இதில் அதிகளவான நெல் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலிருந்தே கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 13ஆம் திகதி முதல் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் நெல் கொள்வனவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

பல பகுதிகளில் நெல் அறுவடை நிறைவடைந்துள்ள போதிலும், பொலன்னறுவை, அநுராதபுரம், குருநாகல் மற்றும் புத்தளம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் தெரிவித்தார்.

இதற்கமைவாக அப்பகுதிகளில் நெல் களஞ்சியசாலைகளைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தலைவர் சுட்டிக்காட்டினார்.

நெல் கொள்வனவிற்காக தற்போது 120 இற்கும் அண்மித்த அளவிலான களஞ்சியசாலைகள் செயற்பாட்டில் உள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular