HomeTop newsதேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று (24) பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 113 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் பதிவாகின.

இதன் மூலம், தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 103 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான அபிவிருத்தியை வலுப்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள இந்தத் திருத்தச் சட்டமூலம் தொடர்பாக பாராளுமன்றத்தில் விரிவான விவாதம் இடம்பெற்றதைத் தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்படி, சட்டமூலம் அடுத்த கட்ட பாராளுமன்ற நடைமுறைகளுக்காக முன்னெடுக்கப்படவுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular