Homeஉலகம்அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை நாளை சுவிட்சர்லாந்தில் ஆரம்பம்? 

அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை நாளை சுவிட்சர்லாந்தில் ஆரம்பம்? 

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் முயற்சியில் பாகிஸ்தான் மத்தியஸ்தராக செயல்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முயற்சியில் பாகிஸ்தானுடன் மேலும் சில நாடுகளும் இணைந்து செயற்பட்டு வருகின்றன.

இந்த முயற்சிகளின் பலனாக, அண்மையில் பிரான்சில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையில் இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்தில் தொழில்நுட்ப மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடைபெறவிருந்த நிலையில், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்கள் புதிய பதற்றத்தை ஏற்படுத்தின.

இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஈரான், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்ததுடன், ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவது குறித்தும் எச்சரிக்கை விடுத்தது.

சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் அமெரிக்க துணை ஜனாதிபதி J. D. Vance பங்கேற்கவிருந்ததாகவும், லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்து அவர் அதிருப்தி வெளியிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அமெரிக்கா–ஈரான் இடையேயான தொழில்நுட்ப மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நாளை Switzerland இல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என பாகிஸ்தான் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்தால், இரு நாடுகளுக்கும் இடையிலான நிரந்தர அமைதி ஒப்பந்தத்திற்கான அடுத்த கட்ட முன்னேற்றங்கள் எட்டப்படலாம் என சர்வதேச அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular