புதிய தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தமது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் அவர் குறிப்பிடுகையில், இலங்கையும் தமிழ்நாடும் வரலாறு, கலாசாரம், வணிகம் மற்றும் பல தலைமுறைகளாக நீடித்து வரும் மக்களுக்கிடையிலான நெருக்கமான உறவுகளால் இணைக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையும் இந்தியாவும் தொடர்ந்து வலுவான கூட்டாண்மையையும் நெருக்கமான உறவுகளையும் கட்டியெழுப்பி வரும் நிலையில், இரு நாடுகளின் எதிர்காலமும் பெரும் பொருளாதார வளர்ச்சியும் புதிய வாய்ப்புகளும் நிறைந்ததாக இருக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்தியா – இலங்கை உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இணைந்து செயல்பட்டு, இருநாடுகளுக்கும் அதிகமான செழிப்பும் முன்னேற்றமும் ஏற்படுத்த ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமிழக முதலமைச்சர் விஜய்க்கும் தமிழக மக்களுக்கும் அனைத்து வெற்றிகளும் கிடைக்க இலங்கை மக்கள் சார்பில் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
Congratulations to Hon. C. Joseph Vijay on being sworn in as Chief Minister of Tamil Nadu.
Sri Lanka and Tamil Nadu are connected through history, culture, enterprise, and enduring people-to-people ties across generations. Our future holds immense economic promise and…
— Anura Kumara Dissanayake (@anuradisanayake) May 10, 2026
