Homeஉள்நாடுஆதிவாசிகளின் புதிய சகாப்தம் - ரதுகல புதிய தலைவராக நிஷாந்த குமார எத்தன் உத்தியோகபூர்வ நியமனம்

ஆதிவாசிகளின் புதிய சகாப்தம் – ரதுகல புதிய தலைவராக நிஷாந்த குமார எத்தன் உத்தியோகபூர்வ நியமனம்

ரதுகலப் பகுதியின் புதிய ஆதிவாசித் தலைவராக தானிகல மஹா பண்டாரலாகே நிஷாந்த குமார எத்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் அண்மையில் காலமான ஆதிவாசித் தலைவர் சுதா வன்னில எத்தனின் புதல்வர் ஆவார்.

நோய்வாய்ப்பட்டிருந்த சுதா வன்னில எத்தன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலமானார்.

அவரது இறுதிக் கிரியைகள் பாரம்பரிய சடங்குகளுடன் இன்று (09) ரதுகலவில் நடைபெற்றன.

அன்னாரது உடல் அவர் வாழ்ந்த நிலத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது.

உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னர், தம்பனை ஆதிவாசித் தலைவர் ஊருவரிகே வன்னில எத்தன், மறைந்த தலைவர் சுதா வன்னில எத்தன் பயன்படுத்திய வில் மற்றும் கோடரியை புதிய தலைவரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular