Homeசெய்தி" உருட்டு பிரட்டு திருட்டு" - சஜித் அணியின் மே தினக் கூட்டத்தில் முற்போக்கு கூட்டணி...

” உருட்டு பிரட்டு திருட்டு” – சஜித் அணியின் மே தினக் கூட்டத்தில் முற்போக்கு கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு!

ஐக்கிய மக்கள் சக்தியின் 2026 ஆம் ஆண்டிற்கான தேசிய மே தின கூட்டம் நாளை கொழும்பு மாளிகாவத்தை பீ.டி.சிரிசேன விளையாட்டு மைதானத்தில் பிற்பகல் 02.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெறும் இந்த மே தின நிகழ்வுகளில் பேரணிகள் எதுவும் இடம்பெறாது.

“உருட்டு பிரட்டு திருட்டு” எனும் தொனிப்பொருளில் இடம்பெறும் இந்த மே தினக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியோடு ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள் பங்கேற்கின்றன.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களும் ஐக்கிய மக்கள் சக்தியின் மேதினக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்..

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular