Homeஉலகம்ஈரான் துறைமுகங்கள் முற்றுகை: ட்ரம்பின் திட்டத்துக்கு பிரிட்டன் எதிர்ப்பு!

ஈரான் துறைமுகங்கள் முற்றுகை: ட்ரம்பின் திட்டத்துக்கு பிரிட்டன் எதிர்ப்பு!

ஹார்முஸ் நீரிணை பகுதியில் உள்ள ஈரானின் அனைத்து துறைமுகங்களையும் முற்றுகையிடும் அமெரிக்காவின் திட்டத்துக்கு ஆதரவளிக்கப்படமாட்டாது என பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

எரிசக்தி விலைகளைக் குறைப்பதற்காக ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்பதே தமது நாட்டின் முக்கிய நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஹார்முஸ் நீரிணை வழியிலான போக்குவரத்துத் தடைகளுக்கு ஈரானே காரணம் என்று அவர் குற்றம் சாட்டியுள்ள பிரித்தானிய பிரதமர், பிராந்தியப் போரில் தனது நாடு நேரடியாக ஈடுபடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, ஹார்முஸ் நீரிணை பகுதியில் கடல் கண்ணி வெடிகளை அகற்றும் பணிக்கு கப்பல் அனுப்புவதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் ஜப்பான் இன்னும் முடிவெடுக்கவில்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular