Homeஉலகம்ட்ரம்புடன் விவாதிக்க விரும்பவில்லை: திருத்தந்தை பதில்!

ட்ரம்புடன் விவாதிக்க விரும்பவில்லை: திருத்தந்தை பதில்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் தான் விவாதத்தில் ஈடுபட விரும்பவில்லை என கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் திருத்தந்தை Pope Leo தெரிவித்தார்.

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் தொடர்பான திருத்தந்தை லியோவின் கருத்துக்களை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

குறிப்பாக சமானத்தை வலியுறுத்திய திருத்தந்தையை “பலவீனமானவர்” என்றும் டிரம்ப் சாடினார்.

அத்துடன் தன்னை இயேசு கிறிஸ்துவாக சித்தரித்து, அது தொடர்பான ஏ.ஐ. புகைப்படத்தை ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் ட்ரம்புடன் விவாதத்தில் ஈடுபட தனக்கு விருப்பமில்லை என்று திருத்தந்தை Pope Leo திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தான் ஒரு அரசியல்வாதி அல்ல என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், சமாதானமே தனது இலக்கு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular