HomeBig Storyபோர் நிறுத்தம்: ஐ.நா. வரவேற்பு!

போர் நிறுத்தம்: ஐ.நா. வரவேற்பு!

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே அறிவிக்கப்பட்டுள்ள இருவார கால போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் வரவேற்றுள்ளார்.

பிராந்தியத்தில் நிலையான அமைதியை நிலைநாட்டவும், பொதுமக்களின் உயிர்களைக் காக்கவும் போர் நிறுத்தம் மிகவும் அவசியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

அனைத்து தரப்பினரும் சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு போர்நிறுத்த விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குத் தேவையான ஆதரவை வழங்க ஐநா சபையின் சிறப்புத் தூதுவர் ஜீன் அர்னால்ட் தற்போது அந்தப் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular