Homeஉலகம்35 ஆவது நாளாக தொடரும் போர்: அமைதி பேச்சு நடத்திய ஈரான் தலைவர் படுகாயம்!

35 ஆவது நாளாக தொடரும் போர்: அமைதி பேச்சு நடத்திய ஈரான் தலைவர் படுகாயம்!

அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே இன்று 35ஆவது நாளாக போர் நீடிக்கின்றது.

ஈரான்மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில்ஈரான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கமல்கராஸி (81) காயம் அடைந்துள்ளார்.
அமெரிக்க துணை ஜனாதிபதியுடன் இவர் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்த சூழலில் ஈரான் மீதான தாக்குதல்களை அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் நேற்றுமுன்தினம் தீவிரப்படுத்தின.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள கமல்கராஸியின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரது குடும்ப உறுப்பினர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திய ஈரான் மூத்த தலைவரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular