Homeஉலகம்அமெரிக்காவின் போர் நிறுத்த முன்மொழிவை நிராகரித்தது ஈரான்!

அமெரிக்காவின் போர் நிறுத்த முன்மொழிவை நிராகரித்தது ஈரான்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலைத் தணிக்க அமெரிக்கா முன்மொழிந்த 15 அம்சங்களை உள்ளடக்கிய தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் நிராகரித்துள்ளது என தெரியவருகின்றது.

பாகிஸ்தான் வழியாகத் தெரிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை ஏற்க மறுத்த ஈரான், குவைத் விமான நிலையம் மற்றும் இஸ்ரேல் மீது தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் ஈரானின் தலைநகர் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதுடன், அமெரிக்கா தனது கூடுதல் ராணுவப் படைகளை அப்பகுதிக்கு அனுப்பியுள்ளது.

ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் பொருளாதாரத் தடைகள் தொடர்பான தீர்வுகளை உள்ளடக்கிய இந்த அமெரிக்கத் திட்டத்தை விடுத்து, தங்கள் நிபந்தனைகள் நிறைவேறும் வரை போரைத் தொடரப் போவதாக ஈரான் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக உலக நாடுகளின் எரிசக்தி விநியோகப் பாதையான ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular