Homeஉள்நாடுஹமாஸ் ஆயுங்களை கைவிட வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்து!

ஹமாஸ் ஆயுங்களை கைவிட வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்து!

ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கட்டாயம் கீழே போட வேண்டும். இனி அவர்களால் காசாவை நிர்வகிக்கவே முடியாது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ வலியுறுத்தினார்.

இஸ்ரேல் சென்றுள்ள அவர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

“ ஹமாஸ் தொடர்ந்த அச்சுறுத்தி வந்தால், அவர்களுக்கு எதிராக மீண்டும் போர் தொடங்க இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் அனுமதி தேவைப்படுமா என்பதை இப்போது கூற முடியாது.

அதே நேரத்தில் அமெரிக்காவின் போர்நிறுத்த திட்டத்திற்கு பிராந்திய அளவில் ஆதரவு இருக்கிறது. இந்த திட்டம் சிறந்த ஒன்று. டிரம்புக்கு வேறு மாற்றுத்திட்டம் இல்லை.” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

காசாவின் எதிர்கால நிர்வாகத்தை இஸ்ரேலும், அதன் நட்பு நாடுகள் தான் வகுக்க வேண்டும். இதில் ஹமாசை சேர்க்க முடியாது.

ராணுவமயமாக்கலை ஹமாஸ் மறுத்தால் அது ஒப்பந்தத்தை மீறுவதாகும். எனவே அது அமுல்படுத்தப்பட வேண்டும். இது ஒரு ஒப்பந்தம், அதற்கான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். இஸ்ரேல் உறுதிமொழிகளை அளித்துள்ளது.

காசா மக்கள் ஹமாஸ் இயக்கத்தால் அச்சப்படாமல் இருக்க, அவர்கள் சிறந்த எதிர்காலத்தை பெற நாங்கள் உதவ விரும்புகிறோம். எனவும் அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோ குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular