Homeஉள்நாடுஎட்டியாந்தோட்டை புனித மரியாள் கிரிக்கெட் விழாவுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி!

எட்டியாந்தோட்டை புனித மரியாள் கிரிக்கெட் விழாவுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி!

எட்டியாந்தோட்டை புனித மரியாள் கிரிக்கெட் விழாவுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி!

எட்டியாந்தோட்டை புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலத்தின் பழைய மாணவர்களின் மாபெரும் கிரிக்கெட் விழாவும் ஒன்றுகூடலும் எதிர்வரும் ஜுன் 07, 08 மற்றும் 09திகதிகளில் நடைபெறவுள்ளது.

பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் எட்டியாந்தோட்டை வின்சன்ட் பெரேரா மைதானத்தில் இந்த கிரிக்கெட் விழா நடைபெறவுள்ளது.

அணிக்கு 11 பேரை கொண்டதாக நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டிகளில் ஒவ்வொரு வருடங்களை சேர்ந்த க.பொ.த சாதாரண தர வகுப்பின் 30க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொள்ளவுள்ளன.

07 ஆம் திகதி காலை பாடசாலையில் இருந்து இடம்பெறும் நடைப்பவணியை தொடர்ந்து முதற்சுற்று போட்டிகள் ஆரம்பமாகவுள்ளதுடன், 09ஆம் திகதி அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதனால் 7ஆம் திகதி காலை 7 மணிக்கு பாடசாலைக்கு வருகை தருமாறு சகல பழைய மாணவர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை கிரிக்கெட் விழாவையொட்டி 8ஆம் திகதி மாலை இசை நிகழ்ச்சியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular