Homeஉள்நாடுஹட்டன் கார்பெக்ஸ் கல்லூரி: இரு நாட்கள் விடுமுறை!

ஹட்டன் கார்பெக்ஸ் கல்லூரி: இரு நாட்கள் விடுமுறை!

ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட கார்பெக்ஸ் கல்லூரிக்கு இன்றும் (02), நாளையும் (03) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அடை மழை மற்றும் கடும் காற்றால் பாடசாலைக்கு அருகாமையில் உள்ள மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் பாடசாலையின் கூரைகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. மூன்று மண்டபங்களும் சேதமடைந்துள்ளன.

இதனால் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி இன்றும், நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

முறிந்துள்ள மரக்கிளைகள் மற்றும் அச்சுறுத்தலான மரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular