Homeஉலகம்உக்ரைன் ராணுவத்தின் ட்ரோன் தாக்குதலில் ரஷ்யாவின் 40 போர் விமானங்கள் அழிப்பு

உக்ரைன் ராணுவத்தின் ட்ரோன் தாக்குதலில் ரஷ்யாவின் 40 போர் விமானங்கள் அழிப்பு

உக்ரைன் ராணுவத்தின் ட்ரோன் தாக்குதலில் ரஷ்யாவின் 40 போர் விமானங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு பெப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில் ரஷ்யாவின் பெலயா, ஒலன்யா, டியாகிலெவா, இவாநோயா ஆகிய 4 விமானப்படை தளங்கள் மீது உக்ரைன் ராணுவம் ட்ரோன்கள் மூலம் நேற்று தாக்குதல் நடத்தியது.

ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் ரஷ்ய விமான படைத் தளங்கள் மீது குண்டுமழை பொழிந்தன. இதில் 4 விமானப்படை தளங்களிலும் 40-க்கும் மேற்பட்ட ரஷ்ய போர் விமானங்கள் தீயில் எரிந்து அழிந்தன.

” ரஷ்ய ராணுவம் நாள்தோறும் போர் விமானங்கள், ட்ரோன்கள் மூலம் உக்ரைன் குடியிருப்பு பகுதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ரஷ்யாவின் 4 விமானப்படை தளங்கள் மீது ட்ரோன்கள் மூலம் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தினோம்.” – என்று உக்ரைன் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

எங்களது தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட ரஷ்ய போர் விமானங்கள் அழிக்கப்பட்டு உள்ளன. ஒட்டுமொத்தமாக ரஷ்யாவுக்கு 2 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டிருக்கிறது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular